Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேசிய கொடிகளை தீவைத்து எரித்த அரசு ஊழியர்..!!

பாப்பம்பட்டி ஊராட்சியில் பழைய ஆவணங்களுடன் தேசிய கொடிகளையும் சேர்த்து எரித்த ஊராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே போதிய கட்டட வசதியின்றி பாப்பம்பட்டி ஊராட்சி அலுவலகம் சமுதாய நலக் கூடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. ஊராட்சியில் உள்ள ஆவணங்களை அருகில் உள்ள சத்துணவு அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அந்த அறையை சுத்தம் செய்யச்சென்ற ஊராட்சி ஊழியர் மதுபோதையில் அங்கிருந்த ஆவணங்களை எடுத்து அறையின் அருகிலேயே திடீரென தீவைத்து எரித்துள்ளார்.

ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் அருகில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்க்கையில், முழுவதும் எரிந்த நிலையில் உள்ள ஆவணங்களுடன் கடந்த குடியரசு தின விழாவிற்கு வாங்கி மீதம் வைத்திருந்த தேசிய கொடிகளும் தீக்கிரையாக்கப்படதை கண்டனர்.

இதனையடுத்து ஊராட்சி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஊழியர் மீதும் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |