ஜெய் நடிக்கும் எண்ணித்துணிக திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவுல பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜெய். இவர் தற்பொழுது வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித் துணிக திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா நடித்திருக்கின்றார். மேலும் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க அஞ்சலி நாயர், சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள்.
ரெய்னா ஆப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பணிகளானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி வெளியாகும் என செய்தி வெளியாகியுள்ளது.