லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளாராம்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கு சுத்தமா வேலையே இருக்காது. அதனால் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்காமல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது நல்லது தான் என்கின்றார்கள். அண்மையில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில் குத்து பாட்டுக்கு நடனம் ஆடினார் சமந்தா. அவரின் இந்த புது முயற்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது புதிதாக வில்லியாக நடிக்க உள்ளார்.