Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், கோவை, தேனி,திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |