நாடு முழுவதும் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அரிசி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது 25 கிலோவுக்கு கீழ் உள்ள வணிக பெயரற்ற தானிய மூட்டைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
வணிக பெயர் இல்லாத 25 கிலோவுக்கு மேற்பட்ட அரிசி போன்ற தானிய மூட்டைகளுக்கு ஜிஎஸ்டி இல்லை. 25 கிலோ தானிய மூட்டையை பிரித்து சில்லறையாக விற்பனை செய்தாலும் வரி கிடையாது என்று தெரிவித்துள்ளது.25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி, பருப்பு, மாவு வகைகள் போன்ற பொருட்கள் கொண்ட ஒற்றை சிப்பங்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.