நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பின்னர் அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்காமலும், வீடுகளில் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமலும் ராஜ்குமார் மற்றும் பிரபு ஏமாற்றி வருவதாக கூறி சிவாஜி இன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவில், அப்பாவின் சொத்தில் தங்களுக்கு பங்கு இருப்பதாகவும், அதனை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கணேசனின் மகள்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துக்களிலும் சம பங்கு உள்ளதாக கூறி ராம்குமார், தங்களிடம் பிரபு விடமும் 2013 ஆம் ஆண்டு பொது அதிகார பத்திரத்தை எழுதி பெற்றனர். 1999ஆம் ஆண்டு எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021 ஆம் ஆண்டு தான் வெளிவந்தது.
அதில் தங்களுக்கு சொத்தில் உரிமை இல்லை என கூறப்பட்டுள்ளதாகவும் உயிலை மெய்ப்பித்து சான்றுக்கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் உண்மையானது கிடையாது. இது ஒரு செல்லத்தக்கதல்ல சான்று என்று மகள்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
நாங்கள் பாகப்பிரிவினை கேட்ட பிறகு தான் சிவாஜி கணேசன் உயிர் எழுதி வைத்ததாக எங்களிடம் கூறினார்கள். சாந்தி தியேட்டரில் இருந்த தந்தை சிவாஜியின் 50 பங்குகளும், தாய் கமலாவின் 650 பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறினர். எனவே இந்த வழக்கில் வாதங்கள் முடியாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.