Categories
தேசிய செய்திகள்

“சூப்பர் குட் நியூஸ்”…. ஆதார் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி…. அதுல அப்படி என்ன இருக்கு தெரியுமா…..????

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு சார்ந்த நிதியுதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது.

அவ்வகையில் தற்போது மக்களின் வசதிக்காக இஸ்ரோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆதார் கார்டு பயனாளர்களுக்கு விரைவில் பயன் அளிக்கும். அதாவது ஆதார் அமைப்பு ஆதார் சேவை மையங்களின் இருப்பிடத்தை கண்காணிப்பதற்கு இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை இனி நீங்கள் சுலபமாக கண்டறிய முடியும். ISRO – UIDAI மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டே அருகில் இருக்கும் ஆதார் மையத்தை பற்றிய தகவல்கள் அனைத்தையும் நீங்கள் எளிதில் பெற முடியும்.

இந்த தகவலை ஆதார தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் NRSC, ISRO மற்றும் UIDAI ஆகியவை ஒன்றிணைந்து ஆதார் அட்டையின் இருப்பிடத்தைப் பெற புவன் ஆதார் போர்டலை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால் ஆதார் மையத்தில் ஆன்லைன் தகவல்களை இதன் மூலமாக எளிதில் பெறலாம். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை அடைவதற்கான வழியையும் இது உங்களுக்கு காட்டும். இதில் அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

எப்படி தெரிந்து கொள்வது?

இதற்கு முதலில் https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதன் பிறகு உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தை பற்றிய தகவல்களை பெறுவதற்கு center near by என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் திரையில் ஆதார் மையம் இருக்கும் இடம் தோன்றும்

இதனைத் தவிர ஆதார் சேவா கேந்திரா மூலம் தேடுதல் பற்றிய தகவல்களையும் பெற முடியும்.

இதில் நீங்கள் ஆதார் மையத்தின் பெயரை உள்ளிடவும், பிறகு மையத்தின் தகவல்களை பெறுவீர்கள்.

நீங்கள் விரும்பினால் உங்களைச் சுற்றியுள்ள ஆதார் மையத்தை பற்றிய தகவல்களை பின்குறியீட்டின் மூலம் தேடுவதன் மூலம் பெற முடியும்.

அதன் பிறகு கடைசி ஆப்ஷனில் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆதார் மையங்களைப் பற்றி தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

ஆதாரம் அமைப்பு அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதி ஆதார் கார்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |