இந்தியாவில் சாமானிய மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் தேசிய பென்ஷன் திட்டம். அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. சமீபகாலமாக தனியார் துறை ஊழியர்கள் மத்தியில் இந்த திட்டம் வெகுவாக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் முதலீடு செய்து வருவதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தலைவர் சுப்ரதீம் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் மிக எளிதாக மொபைல் போன் மூலமாக தேசிய பென்ஷன் திட்ட கணக்கு தொடங்குவதற்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பேப்பர் வேலைகள் எதுவும் இல்லாமல் மொபைல் போன் மூலமாக டிஜிட்டல் முறையில் தேசிய பென்ஷன் திட்டத்தில் கணக்கு தொடங்கி முதலீட்டு பயணத்தை தொடங்கலாம். இதற்கு வெறும் கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்தாலே உங்கள் தேசிய பென்ஷன் திட்ட கணக்கு தொடங்கி விடும். அதில் உங்களது ஆதார் எண் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.