சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை சுங்க வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
செலங்கூர் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் மூன்று கண்டேனர்களில் ஆபத்தான பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதில் 6000 கிலோ யானை தந்தங்கள் இருந்தன.
மேலும் காண்டாமிருக கொம்புகள், புலியின் எலும்புகள் மற்றும் எறும்பு தின்னியின் செதில்கள் என 144 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து மலேசியாவிற்கு மிகப்பெரிய கடத்தல் நடக்க இருந்தது வெளிப்படையாக தெரியவந்துள்ளது .