வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணம் அனுப்பும் மாநிலங்களில் மகராஷ்டிரம் முதலிடத்தை பிடித்ததுள்ளது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டில் அனுப்பிய பணத்தில் 31% மகாராஷ்டிரமும், 10 % கேரளமும் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் வெளிநாடுகளில் வேலையிழந்த கேரளத்தவர் நாடு திரும்பியதே அவர்களின் பங்களிப்பு குறைந்ததற்கான காரணம் என கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தை அமெரிக்கா முந்தியுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது. மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகமாக பணம் அனுப்பும் மாநிலங்களில் கேரளத்தை முந்தி மகாராஷ்டிரம் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.