கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு காரணமான 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூடப்போவதாக தகவல் பரவியதை அடுத்து மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரப்பிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.