Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து: “நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு”… போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி….!!!!!

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே கடந்த 2019 ஆம் வருடம் விலகிய நிலையில், அவருக்கு பதில் போரிஸ்ஜான்சன் பிரதமராக பதவியேற்றுகொண்டார். இருப்பினும் அவரது அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து சென்ற 7 ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து ஜான்சன் விலகினார். அவர் வகித்துவந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதன் காரணமாக பது பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சூழலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியானது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கோரிக்கை விடுத்தது.

இருந்தாலும் பிரதமர் அலுவலகம் இந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டது. அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் எனவும் ஜான்சன் முன்பே பதவி விலகிவிட்ட சூழ்நிலையில் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற நேரத்தினை மதிப்புடன் பயன்படுத்திய ஒன்றாக இருக்காது என்று தெரிவித்து இருந்தது. இருப்பினும் ஜான்சன் அவராக முன் வந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்புவிடுத்து அதற்குரிய பணிகள் நடைபெற்றது.

இவற்றில் நேற்றிரவு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த விவாதம் அந்நாட்டின் நாடாளுமன்ற வலைதளத்தில் ஒலிபரப்பப்பட்டது. இதற்கிடையில் அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக 238 வாக்குகளை பெற்று வாக்கெடுப்பில் ஜான்சன் அரசு வெற்றியடைந்தது. இதனால் இங்கிலாந்தில் பொதுதேர்தல் நடைபெறுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதே சூழ்நிலையில் இந்தியா வம்சாவளியான எம்.பி. ரிஷிசுனாக் 3-வது சுற்றில் அதிக ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளார். இதனிடையில் உறுப்பினர் டாம்டுகெந்தத் வெளியேறியுள்ளார். இதனால் புது பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷிசுனாக் உள்ளிட்ட 4 பேர் மீதம் இருக்கின்றனர்.

Categories

Tech |