திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகில் கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைகாரன்பட்டி கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக கோபமடைந்த கிராமமக்கள் திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஒத்தக்கடை என்னு இடத்தில் திரண்டு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுபற்றி தகவலறிந்த சாணார்பட்டி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா, ஊராட்சி செயலர் வெற்றி வேந்தன் போன்றோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதாவது புதிய ஆழ்துளை கிணறு அமைத்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். அதன்பின் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.