Categories
உலக செய்திகள்

தொடர்ந்து வீசும் வெப்பக்காற்று…. அனலில் தவிக்கும் மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைகள் வீசி வருவதால் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் போன்ற பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. இங்கு கடும் வெப்பம் காரணமாக பல பகுதிகளில் வெப்பக்காற்று வீசி வருகின்றது. மேலும் வெப்ப அலையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்  உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வெப்ப அலையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளான  பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின்  காட்டுத்தீ பரவி வருகின்றது. இந்த காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் தீக்கரையாகியுள்ளன . இது போன்ற காட்டுத்தீ பரவுவதை தடுக்க தீயணைப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பருவநிலை மாற்றம் ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தை அதிகரித்து வெப்ப அலைகள் வீச வழிவகுத்துள்ளதாக வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |