அமெரிக்க நாட்டின் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு பேர் பலியானதாகவும் இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்தில் ஒரு வணிக வளாகம் அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் உணவு விடுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று அங்கிருப்பவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டவுடன் ஒரு நபர் அங்கு சென்றிருக்கிறார். துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தப்பட்டத்தை அறிந்தவுடன், அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த மர்ம நபரை சுட்டார். அதில் அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.