பாரீஸ் நகரில் உள்ள பார் ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சிச்சா என்ற பார் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. அந்த பாரில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அர்ராண்டிசெமண்ட் மேயர் பிரங்காயிஸ் வாக்லின் கூறியதாவது, “துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை செய்ததற்கான உள்நோக்கம் பற்றி இந்த சூழ்நிலையில் எதுவும் தெரியவரவில்லை. இந்த துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடிய மற்றொரு நபரை தேசிய காவல்துறையினர் தேடி வருகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.