நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முதல்நாளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 % ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற வலியுறுத்தி இருஅவைகளிலும் போராட்டம் நடத்தியதால் முடங்கியது. இந்த நிலையில் 2ஆம் நாள் கூட்டம் துவங்கியவுடன் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க எதிர்க் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மறுக்கப்பட்ட காரணத்தால் இருஅவைகளிலும் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து மக்களவையில் பதாகைகளை ஏந்தி அவைத்தலைவரின் இருக்கை அருகில் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது விதிகளின் அடிப்படையில் அவைக்குள் பதாகைகளை கொண்டுவர அனுமதியில்லை என கூறிய சபாநாயகர் ஓம்பிர்லா, பிற்பகல் 2 மணிவரை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியை தொடர்ந்து, இருஅவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர். இதனிடையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயணத்துக்கு அனுமதி வழங்காததைக் கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலுள்ள காந்திசிலை முன்பு மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனர்.