Categories
சினிமா

நடிகர் விமல் வழக்கு: காவல்துறையினர் நேர்மையாக விசாரிக்கணும்…. வெளியான உத்தரவு….!!!!

நடிகர் விமல் கொடுத்த புகாரின்படி சினிமா தயாரிப்பாளர்கள் சிங்கார வேலன், தினேஷ், கோபி போன்றோர் மீதான மோசடி வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகம்பாக்கம் காவல்துறையினர் பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்துசெய்யக் கோரி கோபி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் கோகுல கிருஷ்ணன், வழக்கை ரத்துசெய்யக்கூடாது என வாதிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், மனுதாரருக்கு எதிரான புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், “விமல் கொடுத்த புகாரின்படி பதிவான வழக்கை காவல்துறையினர் நேர்மையாக விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டு முகாந்திரம் இருந்தால் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யலாம். இல்லையெனில் வழக்கை முடித்துவைத்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். ஆகவே மனுதாரர் மீதான வழக்கை ரத்துசெய்ய முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Categories

Tech |