உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வு கட்டணம் விதிக்கப்படும் என அந்த மாநில அரசு முடிவு செய்து இருக்கின்றது. பி ஏ, பி எஸ் சி, பிகாம், பி பி ஏ, பி சி ஏ, பி எஃப் ஏ, பிபிஇஎட்,பி ஜே எம் சி, பி ஓக்கேசன் போன்ற பட்டப் படிப்புகளில் சேரும் இளங்கலை மாணவர்களுக்கு ஒரு பருவ தேர்விற்கு ரூபாய் 800 செலுத்த வேண்டும். எல் எல் பி, பி எஸ் சி, அக்ரி எல்எல்பி, பிடிஎஸ் பயோ டெக் படிக்கும் மாணவர்கள் பி டி எஸ் சி ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்விற்கு ரூபாய் ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஒவ்வொரு செமஸ்டர் தேர்விற்கும் ரூபாய் 1500 செலுத்த வேண்டும். இதற்கான சுற்றறிக்கையை உயர் கல்வித் துறை சிறப்பு செயலாளர் மனோஜ் குமார் வெளியிட்டு இருக்கிறார். அந்த சுற்றறிக்கையில் உத்தரபிரதேச அரசின் உயர்நிலை கல்வித்துறையின் சிறப்பு செயலாளர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அது தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படுவதால் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் செமஸ்டர் தேர்வுகளில் ஒரு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படுகின்றது.
மேலும் உத்தரபிரதேச மாநில பல்கலைக்கழகங்கள் சட்டம் 1973 கீழ் நிறுவப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டணங்களில் மாறுபாடுகள் இருக்கிறது. அதனால் அது சரியல்ல என சுற்றறிக்கை கூறப்பட்டுள்ளது. தற்போது தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் உள்ள படிப்புகளில் செமஸ்டர் முறை அமல்படுத்தப்பட்டதன் விளைவாக ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் அமலுக்கு வந்திருக்கின்றது.