மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையுடன் (பட்ஜெட்) ரயில்வே பட்ஜெட்டையும் கடந்த ஒன்றாம் தேதி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், “ரயில் பயணிகளின் வசதிக்காக ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெரும் தொகை ரயில் பயணிகள் வசதிகளுக்கான கட்டுமானப் பணிக்காகச் செலவிடப்படுகிறது.
குறிப்பாக, மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான ரூ.672 கோடிகள் செலவிடப்பட உள்ளது. இந்தத் தகவல் தென்னக மத்திய ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், “புதிய வரிகளுக்கு மூலதனம், வைப்புத்தொகை, கூடுதல் பட்ஜெட் வளங்கள் உள்ளிட்ட மொத்த பட்ஜெட் மானியம் இரண்டாயிரத்து 856 கோடி ரூபாய் என்றும் மூன்றாம் வரிசை மற்றும் பைபாஸ் லைன் பணிகளுக்கு மூவாயிரத்து 836 கோடி ரூபாய் செலவிடப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.