Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தை…. கைப்பற்றிய அதானி குழுமம்…. பிரபல நாட்டில் கால் பதிக்க திட்டம்….!!

இஸ்ரேல் துறைமுகத்தை ரூபாய் 94 ஆயிரம் கோடிக்கு வாங்கிய  அதானி குழுமம். 

இஸ்ரேல்  நாட்டின் 2-வது மிகப்பெரிய   துறைமுகம் ஹைபா ஆகும். இந்த துறைமுகத்தை ரூ.94 ஆயிரம்  கோடி ஒப்பந்த விலைக்கு அதானி குழுமம் வாங்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த  அதானி குழுமம் பல விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அதானி குழுமம் கைப்பற்றி அதனை மேம்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இதன் கிளை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் தனது வர்த்தகச் சேவையை வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது. அந்த வகையில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் வகையில் இஸ்ரேலின்  ஹைபா துறைமுகத்தை கைப்பற்றியுள்ளது. இந்த துறைமுகத்தை ரூ.94 ஆயிரம் கோடிக்கு இஸ்ரேலின் காடெட் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அதானி குழுமம் வாங்கியுள்ளது.

இந்த ஹைபா  துறைமுகத்தை 2054ம் ஆண்டு வரை அதானி மற்றும் காடெட் குழுமம் நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யும் செலவு குறையும் என்றும் துறைமுகத்தில் நீண்டகாலம் கப்பல்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என்று இஸ்ரேல் நம்புகிறது. இதன் அடிப்படையில் ஹைபா துறைமுகத்தின் 70 % பங்குகள் அதானியிடமும், 30 % பங்குகள் காடெட்  நிறுவனத்திடமும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஹைபா துறைமுகத்தை சீனாவின் ஷாங்காய் சர்வதேச துறைமுக குழுமம் நடத்தி வந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா போன்ற 4 நாடுகள் கொண்ட ஐ2 யு2  உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட்டும் பங்கேற்றுள்ளனர். கிட்டத்தட்ட அதே நேரத்தில் இந்த துறைமுக ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
மேலும் இந்தியாவில் 13 துறைமுகங்களை இயக்கி வரும் அதானி குழுமம் கடல்சார் வர்த்தகத்தில் 24 % தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனை தொடர்ந்து அதானிக்கு   மேற்கத்திய நாடுகளில் நிறுவனங்கள் எதுவும் இல்லை. இஸ்ரேல் துறைமுகத்தை கைப்பற்றியுள்ளதன் மூலம் ஐரோப்பாவில் கால் பதிக்க முடியும் என அதானி நினைக்கிறார் என்று இஸ்ரேல் நாளிதழ் தெரிவித்துள்ளது.

Categories

Tech |