பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது, சாலையில் கோஷமிட்டு ஊர்வலம் செல்வது, ஒருவருக்கொருவர் பொது இடங்களில் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதனால் மக்களுக்கு இடையூறுகளும், போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அனைத்து கல்லூரி வாகனங்கள் செல்லும் பேருந்து வழித்தடலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அல்லது பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.