உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு பகல் பாராமல் ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி ரஷ்யப்படைகள் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில் ரஷ்யா 3000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இருக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறது.
குரூப் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஒனிக்ஸ் ஏவுகணைகள் போன்ற பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேலும் கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட தொழில்துறை கட்டமைப்புகள் பொது உள்கட்ட அமைப்புகளை குறி வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டது என தெரிவித்து இருக்கின்றது.