சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்தி கிராமத்தில் காளீஸ்வரர் என்பவர் ரசித்து வருகிறார். இவர் மற்றும் விருதுநகர் மாவட்ட ராஜபாளையத்தை சேர்ந்த சிவ சூர்யா, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ஆகியோரிடம் கருப்பசாமி என்பவர் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆட்கள் தேவை என கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காளீஸ்வரன், சிவ சூர்யா, தினேஷ் ஆகிய மூவரும் அவரவர் மாவட்டங்களை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோரை தினேஷின் கிராமத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மறுநாள் மதுரைக்கு அனைவரையும் வர வர சொல்லினார். மேலும் அவர் ஹைதராபாத் சென்று விமான மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உள்ளதாக கூறினார்.
இதனை உண்மை என்று நம்பிய அனைவரும் மதுரை பேருந்து நிலையம் வந்து காத்துக் கிடந்த நிலையில் 4 பேரும் வராத நிலையில் செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் switch off செய்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த அனைவரும் பணத்தைப் பெற்ற காளீஸ்வரனின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து காளீஸ்வரனை சொந்த கிராமத்தில் இருந்து அழைத்து வந்த குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் இருந்த பாஸ்போர்ட்கள் அனைத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 90க்கும் மேற்பட்டோரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.