Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிகில் பட விநியோக நிறுவனத்தில் தொடர் சோதனை….. !!

பிகில் பட வருவாய் தொடர்பான முறைகேட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றது.

பிகில் திரைப்படம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் நேற்று காலை இருந்து வருமானவரித்துறையினர் சோதனை செய்துவருகிறது. குறிப்பாக நேற்று தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனத்தில் இந்த சோதனை தொடங்கினார்கள். அதை தொடர்ந்து அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் அலுவலகங்கள் , வீடுகள் போன்ற எல்லா இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தான் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை விஜயை சென்னை அழைத்து சென்று விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஸ்கிரீன் சீன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCREEN SCENEக்கான பட முடிவுகள்

இந்த நிறுவனம் பிகில் படத்தை 80 கோடி ரூபாய்க்கு தமிழக வினியோக உரிமையை பெற்று இருந்தார்கள். தமிழகத்தில் சென்னை , செங்கல்பட்டு , கோவை , திருச்சி என இருக்கும் 9 ஏரியாக்களில் உள்ள தியேட்டர்களில் இந்த நிறுவனம் தான் விநியோக உரிமையை பெற்றதால் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |