இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ராணுவத்தில் சேவையில் இருக்கும் போது உடல் ஊனமுற்றால் மட்டுமே பென்ஷன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர் பென்ஷன் வழங்குவதற்கு அனுமதி அளித்து ராணுவ வீரர்கள் தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர் பென்ஷன் வழங்க வேண்டும் என்றால் ராணுவ சேவைக்கும் சம்பந்தப்பட்ட வீரர் ஊனமுற்றதற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், ராணுவ சேவையின் போது ஊனமுற்ற ராணுவ வீரர்கள்,ராணுவ சேவையால் உடல் ஊனம் 20 சதவீதத்திற்கும் மேல் மோசம் அடைந்தவர்களுக்கு மட்டுமே ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் ராணுவ சேவையில் அல்லாமல் பொதுசாலையில் போன்ற இடங்களில் விபத்து ஏற்பட்டு ராணுவ வீரர் ஊனமுற்றால் அவருக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்கப்படாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.