Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான் 61” ஹீரோயின் யார் தெரியுமா….? புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் விக்ரமின் அடுத்த பட ஹீரோயின் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ்-க்கு தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

இப்படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நிலையில், படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது படம் குறித்த ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |