2ஆம் உலகப்போரின் போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 7,000 மீட்டர் (23,000 அடி) கீழே கண்டுபிடிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸின் 3வது பெரியதீவுப் பகுதியான சமர் தீவில், கடலின் மேற்பரப்பில் இருந்து 6,865 மீட்டர் ஆழத்தில் இந்தகப்பல் சென்ற மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அக்டோபர் 25 1944 அன்று மத்திய சமர்தீவில் நடைபெற்ற போரின்போது அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்தது. இந்நிலையில் இந்த கப்பல் மூழ்கிய இடம் பற்றிய துப்புகளை அடிப்படையாக வைத்து கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பலில் தேடும் பணியில் ஈடுபட்ட ஒரு குழு இந்த மூழ்கிய கப்பலின் பாகங்களை கண்டுபிடித்து உள்ளது.
இந்த சூழ்நிலையில் உலகில் நடந்த மிக ஆழமான கப்பல் விபத்து என்ற கின்னஸ் உலக சாதனையை இந்த விபத்து முறியடித்துள்ளது. இதை கின்னஸ் நிர்வாகமானது அறிவித்துள்ளது. அமெரிக்க கடற்படை பதிவுகளின் அடிப்படையில் ‘ஜான் சி பட்லர்- யு.எஸ்.எஸ் சாமுவேல் பி ராபர்ட்ஸ்’ என்பதே 2ஆம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான இந்த கப்பலின் பெயராகும். இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட 6,500 மீட்டர் கடல் ஆழத்தில், 2021-ல் கண்டுபிடிக்கப்பட்ட யுஎஸ்எஸ் ஜான்ஸ்டன் என்ற கப்பல் விபத்துதான் உலகின் மிக ஆழமான கப்பல் விபத்து என்று அடையாளம் காணப்பட்டது. அந்த கப்பலில் 2ஆம் உலக்ப்போரின்போது பயன்படுத்த கொண்டுசெல்லப்பட்ட வெடி மருந்துகள் இன்னும் வெடிக்கும் சூழ்நிலையில் இருப்பதும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.