தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீசை மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம் நேரில் சென்று அளித்துள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 3ம் தேதியோ அல்லது அதற்குப் பின்னரோ வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான நோட்டீசை மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். மேலும் இந்த நோட்டீசை சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம் இன்று போக்குவரத்து சங்கத்தினர் ஒப்படைத்துள்ளனர்.