Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாணமாக நடிக்க தயார்….. தமிழ் பட நடிகை பகீர் பேட்டி….!!!!

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்குவதில் வல்லவர் பார்த்திபன். அப்படி அவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல்.  இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல் திரைப்படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே சாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான் லீனியர் முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பு. படம் முழுக்க முழுக்க சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக பிரகிடா நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ரேகா நாயர் ஒரு காட்சியில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இதில் எந்த கதாபாத்திரமும் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆபாசமாக இல்லை என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு நடிகை ரேகா நாயர் பேட்டி அளித்தார்.

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ரேகா நாயர், கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிக்கத் தயார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், கலையை கலையாக பார்க்க வேண்டும். ஆபாசமாக பார்த்தால் ஆபாசம் மட்டும்தான் தெரியும். இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததற்கு எனக்கு பாராட்டுகளும் கிடைத்தன, வசைகளும் கிடைத்தன என கூறியுள்ளார்.

Categories

Tech |