பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காலராவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு உண்டானது. இதில் பலுசிஸ்தான் மாகாணம் கடும் சேதமடைந்தது. இந்த மாகாணத்தில் இருக்கும் 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டனர். மேலும் சோப் மற்றும் லாத் போன்ற மாகாணங்களில் காலராவும் பரவிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது வரை காலரா பாதிப்பால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில மாவட்டங்களில் காலாராவால் பாதிக்கப்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உலக சுகாதார அமைப்பிடம் காலரா பாதிப்பிற்கான மருந்துகளையும், மருத்துவர்களையும் அனுப்புமாறு அதிகாரிகள் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.