Categories
உலக செய்திகள்

கனேடிய மாகாணம்: உணவு இல்லாததால் மக்கள் இறக்கிறார்கள் என்பது அவலநிலை…. பேரணியில் இறங்கிய மக்கள்…..!!!!

இலங்கை நாட்டில் தங்களவர்கள் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தாங்கள் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக கனேடிய மாகாணம் ஒன்றில் மக்கள் பேரணிகளில் இறங்கியுள்ளனர். கனடாவின் Saskatchewan-ல் வாழும் இலங்கையர்கள் தான் இப்படி தங்களது மக்களுக்காக பேரணிகளில் இறங்கியுள்ளனர். அந்நாட்டில் நிலவும் பயங்கரமான நிலைமைக்கு பொருளாதார மேலாண்மை சரியாக இல்லாததே காரணம் என கூறும் Saskatchewan பல்கலையில் கால்நடை நுண்ணுயிரியல் பயிலும் தினேஷ் (Dinesh Wellawa. 39) கடந்த மாதம் தான் இலங்கைக்குச் சென்ற போது இலங்கையின் நிலைமையைக் கண்ணால் பார்த்ததாக தெரிவிக்கிறார். எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து இருக்கும் விமானங்கள் வெறுமையாக காணப்பட்டதாகவும், நிரம்பிவழியும் ஹொட்டல்கள் தற்போது 50 % தள்ளுபடி அறிவித்து இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு வாங்குவதற்காக 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நிற்கவேண்டி இருந்ததாகவும், பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்றால் அங்கு எந்த பொருளும் இல்லை எனவும் தினேஷ் கூறுகிறார். அதேபோன்று Ushan Alahakoon (27) என்பவர் தனது தந்தைக்கு 2 வருடங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவருக்கு நீரிழிவு பிரச்சினை உள்ளது எனவும் கூறுகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மருந்துகள் வாங்குவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது என கூறும் Ushan, இலங்கை மக்கள், வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்ப சொல்லத் தயங்குவதாக தெரிவிக்கிறார்.

அவ்வாறு மக்கள் அனுப்பும் பணத்தை அரசு கைப்பற்றிவிடும் என்று அவர்கள் அஞ்சுவதாக அவர் தெரிவிக்கிறார். எனவே கனடா அரசு இலங்கைக்கு உதவ முன்வருமானால் பணமாக அனுப்பாமல் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களாக அனுப்பினால் அது உண்மையாகவே பெரிய உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். உணவு இல்லாததால் மக்கள் இறக்கிறார்கள் என்பது அவமானம் என கூறும் Ushan, உடல் நலமில்லாத, வயதான தன் தந்தை பெட்ரோல் வாங்குவதற்காக 15 மணிநேரம் வரிசையில் நிற்கவேண்டி இருந்தது என்கிறார். கனடா அரசு இலங்கைக்கு மனித நேய உதவி செய்யுமானால் அது இலங்கையின் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் என Ushan கூறினார்.

Categories

Tech |