நாட்டில் உள்ள பணவீக்கத்தை குறைப்பதற்கு 5% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் பணம் வீக்கமானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரிதான். இந்த ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பிறகு நாட்டிலுள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் பண வீக்கத்துடனும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுடனும் போராடும்போது, மத்திய அரசு அதை பொருட்படுத்தாமல் ஜிஎஸ்டி வரியை எப்படி உயர்த்தலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
இந்நிலையில் அரிசி, பருப்பு, ஆட்டா, தயிர், பன்னீர் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள ஊழலை குறைத்தாலே வரி விதிப்பிற்கான அவசியம் ஏற்படாது. நாட்டில் உள்ள அனைத்து ஊழல்களையும் ஒழித்தாலே, அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி மற்றும் மக்களுக்கு இலவச மருத்துவம் போன்றவற்றை வழங்கலாம். இந்த ஊழலை ஒழிப்பதன் மூலம் பணவீக்க காலத்தில் ஏற்படும் சிக்கலான நெருக்கடிகளையும் தவிர்க்க முடியும். அப்போது தான் நம் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும்.
இதைத்தொடர்ந்து பணவீக்கத்தில் இருந்து ஓரளவு ஓய்வு பெற்ற மாநிலம் என்றால் அது டெல்லி தான். இங்குள்ள மக்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், இலவச கல்வி, 300 யூனிட் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை டெல்லி அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரும் மாதம் 10,000 முதல் 15 ஆயிரம் வரை சேமிக்கின்றனர். மேலும் நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு உணவுப் பொருள் களுக்கு விரிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.