நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ரசிகர்கள் ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
நேற்றும் , இன்றும் தமிழகத்தில் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கக்கூடிய விஷயம் AGS பட நிறுவனத்தின் ரெய்டு. பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக எழுந்த முறைகேடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள 38 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையில் பிகில் பட ASG நிறுவன அலுவலகம் , உரிமையாளர் வீடு , பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகம் , வீடு , நடிகர் விஜய் வீடு , அலுவலகம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் என சோதனை பட்டியல் நீள்கின்றது.
இது தொடர்பாக நேற்று நடிகர் விஜயிடம் தொடங்கிய விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் 77 கோடி பணம் கைப்பற்றப்பட்டது என்றும் , 300 கோடி கணக்கில் வராத பணம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் , அடுத்தடுத்து பரபரப்பு குறையாமல் வந்து கொண்டே இருந்தது.
இதையும் படிங்க : ரூ 300,00,00,000 முறைகேடு…. ரூ 77,00,00,000 பறிமுதல்…. விஜய் வாக்குமூலம் …!!
இரண்டு நாளாக தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனை தமிழ் சினிமாதுறையை உலுக்கியது. தமிழகம் முழுவதும் உள்ள விஜயின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விஜய்க்கு துணை நிற்போம் என்ற ஹாஸ்டக்கை ட்ரென்ட் செய்து வந்தனர்.
#WeStandWithVIJAYanna என்ற ஹேஸ்ட்டாக்கில் விஜய் ரசிகர்களுடன் இணைந்து அஜித் , சூர்யா ரசிகர்களும் கைகோர்த்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்த ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி நடிகர் விஜய்க்கு ஆதரவு கூடிக் கொண்டே சென்றாலும் IT-யின் சோதனை வேதனைக்கூறிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இதையும் படிங்க : நாங்களே சங்கடத்துல இருக்கோம்…. நீங்க வேறயா ? விஜய் ரசிகர்கள் வேதனை …!!
இந்நிலையில் எங்களுக்கு என்ன பயம் ? நாங்கள் எல்லா தளபதி புள்ளைங்கோ என்பதை உறுதிப்படுத்தும் மனநிலையில் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். மாஸ்டர் படத்தின் எழுத்தாளர் ரத்ன குமார் தனது ட்வீட்_டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் ஆடியோ குறித்து பதிவு வெளியிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடாக #MasterAudioLaunch என்ற ஹாஷ்டாக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Waiting for #Master Audio Launch🔥🔥🔥🤫
— Rathna kumar (@MrRathna) February 6, 2020