Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வு” தமிழக பாடத்திட்டத்தில் இருந்து அதிக கேள்விகள்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 17-ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன் பிறகு மீதமுள்ள 38 கேள்விகள் NCERT பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் உள்ள 200 மதிப்பெண்களில் விலங்கியல், தாவரவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும்.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பாடத்திட்டத்தில் இருந்து வேதியியல் பாடத்தில் 40 கேள்விகளும், தாவரவியல் மற்றும் விலங்கியலில் 74 கேள்விகளும், இயற்பியலில் 48 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வு சுலபமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |