ரஷ்ய அதிபர் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் ஈரானுக்கு சென்றுள்ளார். இவர் ஈரான் மற்றும் துருக்கி அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.
இருப்பினும் புதின் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தி வருகிறார். அதன் பிறகு ரஷ்ய அதிபர் புதின் ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு சென்ற போது அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அதிபர் புதின் ரெசிப் தையிப் எர்டோகன் மற்றும் இப்ராஹிம் ரைசி ஆகியோருடன் தானிய ஏற்றுமதி மற்றும் உக்ரைன் மீதான போர் ஆகியவை குறித்து விவாதிக்க போவதாக கூறப்பட்டுள்ளது.