நாமக்கல்லில் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை புது பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் லாரி அதிபர். இவர் தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பொருளாளராகவும் இணை செயலாளராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனியாக இருந்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் போலீசார் விசாரணை செய்ததில் முதல் கட்டமாக அவர் தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிகின்றது. மேலும் அவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினாலும் கடன் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் போலீசார் அவரின் தற்கொலைக்கு காரணம் என்னவாக இருக்கும் என விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.