ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, சாமானிய முதல்-அமைச்சராக சரித்திர சாதனை படைத்திட்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சாமானிய தொண்டனாகிய என் மீது கனிவும், பரிவும் கொண்டு, ஜெயலலிதாவின் மறுவடிவமாக இந்த வரலாற்று வாய்ப்பினை தெய்வ உள்ளத்தோடு வழங்கி இருக்கிறார். அவரது நம்பிக்கைக்கு உரியவனாகவும், தலைமைக்கும், கட்சிக்கும் ஜெயலலிதா இருக்கும் போது எப்படி விசுவாசமாக பணியாற்றினோமோ அவ்வாறு பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
Categories