மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்மணி புறவழிச்சாலை அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அத்திமூர் பகுதியில் வசிக்கும் முருகன், ரோஹித் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் திருட வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 7 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.