நடிகர் சிபிராஜ் நடிக்கும் வட்டம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் சிபிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அதுல்யா ரவி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.