சமந்தாவின் மாஜி கணவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்கள்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற வருடம் இணையத்தில் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதன் பின்னர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். சமந்தா நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிலிருந்து நீக்கிவிட்டார். மேலும் விவாகரத்து குறித்து பகிர்ந்த பதிவையும் நீக்கினார். ஆனால் நாக சைதன்யா சமந்தாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கவில்லை. அப்படியே வைத்திருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் உண்மையான காதல், அன்பு. அது என்றும் மாறாது. புகைப்படங்களை நீக்காமல் இருப்பதன் மூலம் உங்களின் குணம் தெரிகின்றது என நாக சைதன்யாவை ரசிகர்கள் பாராட்டுகின்றார்கள்.
மேலும் ட்விட்டர் பக்கமும் பத்து நாட்களுக்கு மேலாக வரவில்லை. சமந்தாவின் மாஜி கணவர் நாக சைத்தன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக இணையத்தில் செய்தி பரவியது. நாக சைதன்யாவின் பெயரை கெடுப்பதற்காக சமந்தா செய்த காரியம் என ரசிகர்கள் விளாசினர். இதையடுத்து சமந்தா அவர் விஷயத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறினார். இதனால் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா முதல் முறையாக தனது விவாகரத்துக் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் குறிப்பிடத்தக்கது.