Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மக்களே உஷார்… வாட்ஸ் அப் டிபி மூலம்….. ரூ.2 லட்சம் கொள்ளை….!!!!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு, முன்னாள் தலைமை நீதிபதி சதீஷ் சந்திராவின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபியாக வைத்த கணக்கு ஒன்றிலிருந்து நேற்று மெசேஜ் வந்தது. அதில், “எனக்கு அவசரமாக ரூ. 2 லட்சம் தேவைப்படுகிறது. பணம் அனுப்புங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நம்பிய அலுவலர் ரூ. 2 லட்சம் பணத்தை அனுப்பினார். இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில் தான் ஏமாற்றப்பட்டிருப்பது அலுவலருக்கு தெரியவந்தது. உடனே அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |