தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதலை பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.