இந்தியாவில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் கட்டாயமாக சேவை கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் அதிலும் சில உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மிக அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதனால் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிக்க கூடாது என்று அனைத்து உணவகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் கட்டாயம் வசூலிக்க கூடாது எனவும் அவர்கள் தாமாக விரும்பி செலுத்துவது தான் சேவை கட்டணம் எனவும் அரசு தெரிவித்தது. இந்த விதியை மீறி சேவை கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சேவை கட்டணம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் உணவக உரிமையாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனோ நாளை விசாரணைக்கு வருகிறது.சேவை கட்டணம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் அனைத்திற்கும் சட்ட அடிப்படையில்லை என்றும் அரசின் விதிமுறைகளை உத்தரவாக ஏற்க முடியாது என்றும் தேசிய உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.