ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருள் உங்களிடம் வந்து சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கக்கூடும்.
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்பம் முன்னேற்றம் அடைய உதவும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று மனம் மகிழ்ச்சியாகவே காணப்படும். கொடுக்கல் வாங்கல் கூட சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கடுமையாக உழைத்து போராட வேண்டி இருக்கும். ஆசிரியரின் சொற்படி நடந்து கொள்ளுங்கள். சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்