Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக முடிவெட்டவில்லை?… ஆசிரியர் செய்த செயல்…. அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருடைய மகன் ஜெயக்குமார் (17) அதே பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல மாணவர் ஜெயக்குமார் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் ஏன் சரியாக முடிவெட்டவில்லை எனக் கேட்டு அவரை பள்ளியின் வெளியில் நிற்கவைத்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மாணவர் பள்ளியின் வெளியே நின்றுகொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஜெயக்குமார் அருகிலுள்ள கடைக்கு சென்று விஷமருந்தை வாங்கி வந்து பள்ளிக்கூடத்தின் வெளியே வைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த மாணவர் ஜெயக்குமாரை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் மேல்சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மங்கலம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |