Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆறு: வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு…. 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!

கர்நாடாகவில் பெய்த கனமழை காரணமாக காவிரிஆற்றில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்து நிரம்பியதை அடுத்து, அதில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. அந்த நீர் கல்லணை வழியே கீழணைக்கு சீறிபாய்ந்து வந்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணிநிலவரப்படி கீழணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அந்த நீர் படிப்படியாக அதிகரித்து நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் கீழணை சில மணி நேரங்களிலேயே முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு நலன்கருதி உபரிநீர் கொள்ளிடம்ஆற்றில் திறக்கப்பட்டது. இதற்கிடையில் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொள்ளிடம்ஆற்றில் நீரை சேமித்து வைப்பதற்காக தடுப்பு அணை கட்டும் பணியானது நடந்து வருகிறது. இப்பணி முழுமையாக இன்னும் முடியவில்லை. இதன் காரணமாக அந்த ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடலில் கலந்து வீணாகிகிறது.

இதனிடையில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்படி சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் தலைமையில் வருவாய்த் துறையினர் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்திலுள்ள கிராமங்களான ஜெயங்கொண்ட பட்டினம், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், காட்டுக்கூடலூர், பழையநல்லூர், சாலியந்தோப்பு, வையூர், அகரநல்லூர், ஏருக்கன்காட்டு படுகை, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி ஆகிய 20 மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆட்டோவில் ஒலிபெருக்கி வாயிலாக அங்கிருந்த மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் அதிகளவு தண்ணீர் வருவதால் ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ அனுமதி கிடையாது. அத்துடன் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு போகவேண்டும் என்று அறிவுறுத்தினர். அதுமட்டுமின்றி கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியே வினாடிக்கு 2.100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக இப்போது 42.90 அடியாகவுள்ள ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை விரைவில் எட்டும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Categories

Tech |