மிதுனம் ராசி அன்பர்கள்..!! இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாக இருக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இன்று நீங்கள் இழக்க வேண்டி வரும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பணிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும்.. உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிவார்கள். அந்த விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுடைய நிலையையும் இன்று கொஞ்சம் உயர செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். அதனால் கொஞ்சம் பணிச்சுமை கூடும்.
சக பணியாளர்களிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை இன்று வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அலுவலகம் மூலம் வாகனங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு உதவிக்கு இப்பொழுது பாராட்டு கிடைக்கக்கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருப்பதற்கு இறைவழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை எழுதி பார்ப்பது சிறப்பு. சந்தேகம் ஏதும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்