உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. அத்துடன் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் அடிப்படையில் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளது. இதனிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளை சமாளிப்பதற்கு ஆசியா, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்த ரஷ்யா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக ஈரான் சென்றிருக்கிறார். சென்ற சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் இப்போது ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. இவ்வாறு அங்கு சென்றுள்ள புதின், ஈரான்நாட்டு தலைவர் அயதுல்லா அலிகா மேனி, அதிபரான இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் போன்றோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.