Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு…. புதிய ஆட்சியர், புதிய எஸ்பி பதவியேற்பு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் பெரிய அளவில் அரங்கேறியது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மாணவியின் மரணம் குறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, வேதியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா அகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடவாத் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல மாவட்ட எஸ்பி செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த பகலவன் ஐபிஎஸ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எஸ்.பி. ஆக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் எஸ்பி செல்வகுமாருக்கு எந்த பணியிட ஆணையும் வழங்கப்படவில்லை. திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக இருந்த பகலவன் கடந்த 2016 ஆம் ஆண்டு வேலூர் எஸ்பி ஆக நியமிக்கப்பட்ட அங்கு திறம்பட பொறுப்பாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |